இதோ வந்துடுச்சி சாம்சங்கின் மடிக்கக்கூடிய ஃபோன்...

share on:
Classic

மடிக்கக் கூடிய மொபைல் ஃபோனை வரும் 20-ஆம் தேதி வெளியிடப்போவதாக சாம்சங் மொபைல் நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

'சாம்சங்' நிறுவனம் வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி அமெரிக்காவின் சான் ஃப்ரான்சிஸ்கோ மாகானத்தில் ‘அண்பேக்டு 2019’ என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளது. இந்நிகழ்வில் கேலக்ஸி S10, S10e, S10+ ஆகிய மொபைல் ஃபோன்களையும், ‘கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ்’ எனும் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ‘கேலக்ஸி பட்’ எனும் ஒயர்லெஸ் ஹெட்செட்டையும் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொபைல் ஃபோன் தொழில்நுட்பத்தில், சமீபகாலமாக பல புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து அறிமுகமாகி வருகின்றன. அதில் ஒன்று தான் மடித்து பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட் ஃபோன். இந்நிலையில் சாம்சங் தன் ட்விட்டர் பக்கத்தில் நேற்று டீஸர் வீடியோ ஒன்றை வெளியிட்டு “The future of mobile will unfold on February 20” என பதிவிட்டிருந்தது. இதன் மூலம் ‘கேலக்ஸி ஃபோல்டு’ மடிக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோனை வெளியிடப்போவதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.

கேலக்ஸி ஃபோல்டு கிட்டத்தட்ட ரூ. 1,30,000-க்கு விற்கப்படலாம் என கூறப்படுகிறது. இம்மாத தொடக்கத்தில் ’Huawei’ மொபைல் நிறுவனம் வரும் 24-ஆம் தேதி தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்துவதாக தெறிவித்திருந்த நிலையில், சாம்சங்கின் இந்த அறிவிப்பு உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth