வந்தாச்சு சாம்சங்கின் M Series மொபைல்..இதில் என்ன ஸ்பெஷல் ? 

share on:
Classic

நீண்ட வதந்திகளுக்கு பிறகு சாம்சங் நிறுவனம் சாம்சங் M Series மொபைலின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. 

சாம்சங் நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது அதில், சாம்சங் M Series மொபைல் ஜனவரி 28-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என உறுதி செய்தது. இந்த ஸ்மார்ட் போன் இளைய தலைமுறையினர்களுக்கான சக்தி வாய்ந்த திரை அமைப்பு, கேமரா, பேட்டரி மற்றும் செயலி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. Galaxy M Series ஸ்மார்ட் போன், அமேசான் இந்தியா மற்றும் சாம்சங் நிறுவனத்தின் ஷாப்பிங் தளத்திலும் கிடைக்கும் என சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் சந்தையில் Xiaomi போன்ற ஸ்மார்ட் போன்களின், உலகளாவிய வெளியீடுகளுக்கு முன்னதாக இந்தியாவில் பட்ஜெட் மொபைலான  Galaxy M ஸ்மார்ட்போன் தொடரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

அமேசான் மற்றும் சாம்சங்கின் சொந்த ஆன்லைன் ஷாப்பிங் இணையதளம் மூலம் சாம்சங் Galaxy M ஸ்மார்ட் போனை வெளியிடுவதன் மூலம் இதன் ஆன்லைன் விற்பனையை இரட்டிப்பாக்க உதவுகிறது, என  சாம்சங் நிறுவனம் ராய்ட்டரிடம் கூறியுள்ளது.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான நுகர்வோர்களை கவரும் விதத்தில் இந்த Galaxy M Series மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது, என ஆஸிம் வார்சி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதன் வெயியீட்டிற்கு பிறகு இது உலகளாவிய அளவில் உருவாக்கப்படும் என்றும் கூறினார். மேலும் இவர் M Series மொபைலின் சிறப்பம்சத்தை கூற மறுத்துவிட்டார். ஆனால் இந்த மொபைல் விற்பனை இரட்டிப்பு லாபத்தை தரும் என்று கூறியுள்ளார்.

asim warsi samsung க்கான பட முடிவு

வியாபார நுண்ணறிவு தளமான paper.vc ஆதாரமாகக் கொண்ட கட்டுப்பாட்டு ஆவணங்களின் படி, இந்தியாவில் சாம்சங் மொபைல் போன் விற்பனை ரூ. 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 12 மாதங்களில் 373.5 பில்லியன் டாலராக இருக்கும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொலைபேசிகள், ரூ. 10,000, ரூ. 20,000 என்ற பட்ஜெட்டுடன்  விரைவான சார்ஜிங், சன்க்யூர் பேட்டரிகள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும், என வார்ஸி கூறியுள்ளார்..

சாம்சங் மொபைல் 2,50,000 சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் 2000 க்கும் அதிகமான பிரத்யேக கடைகள் மூலம் அதன் தொலைபேசிகளை விற்கிறது. மேலும், 2,000 சாம்சங் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு புதிய எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

youtube