இந்தியாவில் வெளிவரவிருக்கும் சாம்சங் காலக்ஸி எம்10 மொபைலின் விவரங்கள் கசிந்துள்ளது.

Classic

விரைவில் இந்தியாவில் வெளிவரவிருக்கும் புதிய சாம்சங் காலக்ஸி எம் சீரிஸ் மொபைலின் விவரங்கள் இணையதளத்தில் கசிந்துள்ளது.

ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பட்ஜெட் ஸ்மார்ட் போன்களை குறிவைத்து சாம்சங் காலக்சி எம் சீரிஸ் மொபைல் விற்பனைக்கு வர உள்ளது. வரும், ஜனவரி 28-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ள காலக்ஸி எம் 10, காலக்ஸி எம் 20 மற்றும் காலக்ஸி எம் 30 ஆகிய மூன்று மொபைல்களில் ஏதாவது இரண்டு மட்டுமே வெளியாகும் வாய்ப்பு உள்ளது.

ஸ்லேஷ் லீக்ஸ் (SlashLeaks) இணையதளத்தில் சாம்சங் காலக்ஸி எம்10 மொபைலின் செயல்திறன் மற்றும் பயனர் குறிப்பு போன்றவை தற்போது வெளியாகியுள்ளது.

வடிவமைப்பு மற்றும் செயல்திறன் 

சாம்சங் காலக்ஸி எம்10 ஸ்மார்ட் போன் 6.2 இன்ச் +(720X1520 பிக்ஸல்) எச்.டி டிஸ்பிலே அமைப்பை பெற்றுள்ளது. 14என்எம் ஆக்டா கோர் எக்சினோஸ்(14nm octa-core Exynos) 7870 ப்ரோசஸர் உதவியுடன்,2GB மற்றும் 3GB RAM மெமரி அமைப்புடன் வெளிவரவிருக்கிறது.

ஸ்லேஷ் லீக்ஸ் (SlashLeaks) இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த ஸ்மார்ட்போன் 13 மெகா பிக்சல் (MP) + 5 மெகா பிக்சல் (MP) சென்சாருடன் கூடிய இரண்டு பின்பக்க கேமரா அமைப்பை பெற்றுள்ளது.

சாம்சங் காலக்ஸி எம்10 ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்துடன் 3,400mAh திறன் கொண்ட பேட்டரி அமைப்பை பெற்றிருக்கிறது.மேலும் இந்த ஸ்மார்ட் போன் வெறும் 7.66 mm மெல்லிய வடிவமைப்புடன்,160 கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

youtube