2 புதிய டேப்களை வெளியிட்ட சாம்சங்

share on:
Classic

அல்ட்ரா போர்ட்டபிள் கேலக்ஸி டேப் S5e மற்றும் கேலக்ஸி டேப் A 10.1-ஐ வெளியிட்டது சாம்சங்.

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் அல்ட்ரா போர்ட்டபிள் கேலக்ஸி டேப் S5e ரூ. 35,999-லும்  கேலக்ஸி டேப் A 10.1-ஐ ரூ.14,999-லும் வெளியிட்டது. கேலக்ஸி டேப் S5e-ன் வைஃபை வேரியண்ட்டின் விலை ரூ. 35,999-ஆகவும், வைஃபை + எல்டிஇ வேரியண்டின் விலை ரூ.39,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் A 10.1-ன் வைஃபை வேரியண்ட்டின் விலை ரூ. 4,999-ஆகவும், வைஃபை + எல்டிஇ வேரியண்டின் விலை ரூ. Rs 19,999-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   
 
கேலக்ஸி டேப் A 10.1 :  
கேலக்ஸி டேப் A 10.1 மெட்டல் பாடி டிசைனுடனும் முழு எச்டி கார்னர்-டு-கார்னர் டிஸ்ப்ளேவுடனும் வருகிறது. 470 கிராமுக்கும் குறைவான எடையும், 7.5 மிமீ தடிமன் அளவில் தயாரிக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி டேப் A 10.1 (வைஃபை மட்டும்) அமேசான்.இன் மற்றும் சாம்சங் இ-ஷாப்பில் ஜூன் 26 முதல் விற்பனைக்கு கிடைக்கும். கேலக்ஸி டேப் A 10.1 (வைஃபை + எல்டிஇ) ஜூலை 1 முதல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி டேப் S5e :
5.5 மிமீ நேர்த்தியான மெட்டல் பாடி மற்றும் 400 கிராம் எடையுள்ள கேலக்ஸி டேப் S5e அல்ட்ரா போர்ட்டபிள் மட்டுமல்ல, அதன் பேட்டரி ஆயுள் 14.5 மணிநேர வீடியோ ஸ்ட்ரீமிங்கை செய்ய முடியும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. கேலக்ஸி டேப் S5e இன்று முதல் அனைத்து முன்னணி சாம்சங் இ-ஷாப் மற்றும் சாம்சங் ஓபரா ஹவுஸ் முழுவதும் விற்பனைக்கு வரும் என்றும் கேலக்ஸி டேப் S5e வைஃபை வேரியண்ட் அமேசான்.இன்-லும், வைஃபை + எல்டிஇ வேரியண்ட் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது.  
 

News Counter: 
100
Loading...

udhaya