இல்லதரிசிகளுக்கு இன்பமான செய்தி - வரப்போகுது சாம்சங்கின் 98 இன்ச் டிவி

share on:
Classic

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய கண்டுபடிப்புகள் அனைத்தும் நுகர்வோர் கண்காட்சி நிகழ்ச்சி 2019 (Consumer Exhibition Show 2019 - CES 2019) அரங்கில் சாம்சங் நிறுவனத்தின்  8K QLED 98 அங்குல டிவி இடம்பெற்றுள்ளது.

CES 2019 (Consumer Exhibition Show 2019):

உலகின் முன்னணி டெக்னாலாஜி நிறுவனங்கள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகள், முன்னணி கார் நிறுவனங்களின் டெக்னாலாஜி சார்ந்த கண்டுபிடிப்புகள் என மொத்தமாக கேட்ஜெட்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான கண்காட்சியாக விளங்குவது தான் சிஇஎஸ் 2019. 

சாம்சங் 8K QLED TV

முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் Q900 8K  QLED சீரியஸ் மிகப்பெரிய திரைகளுடன் சிஇஎஸ் 2019 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது 65,75,85 இன்ச் டிவிகளை ஒப்பிடுகையில் பொருளுக்கேற்ற விலை மற்றும் ஒரிஜினல் விசுவல் தரத்துடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8K Resolution தரத்தை பெற்றிருக்கும் சாம்சங் தொலைக்காட்சி விற்பனைக்கு வரும் தேதியை அறிவிக்கப்படவில்லை என்றாலும் இந்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் முன்னதாக கூறியது போல கூகிள் அசிஸ்டன்ட், அலெக்சா சப்போர்ட் மற்றும் ஆப்பிள் ஐ டியூன் போன்ற சேவைகளை பெற்றிக்கும். இத்தனை வசதிகளை கொண்ட இந்த டிவியின் விலை கண்டிப்பாக குறைவாக மட்டும் இருக்காது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

News Counter: 
100
Loading...

youtube