வரலாற்று சிறப்பு மிக்க 'லைட் ஹவுஸை' பார்த்துக்கொள்ள 91 லட்சம் சம்பளம்..!!

share on:
Classic

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் ஒரு தீவு,  ஒரு லைட் ஹவுசை பார்த்துக்கொள்ள இரண்டு பேருக்கு சேர்த்து 91 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க லைட் ஹவுஸ் :

'ஈஸ்ட் பிரதர் லைட் ஸ்டேஷன்' என்று அழைக்கப்படும்  இந்த லைட் ஹவுஸ் சான் பிரான்சிஸ்கோவில் உள்ளது. 1874 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது சான் பிரான்சிஸ்கோ விற்கு வரும் மாலுமிகள் குழப்பமான சூழ்நிலைகளில் சரியான திசையில் கப்பலினை செலுத்துவதற்காக கட்டப்பட்டது. மேலும் இதனுள் உணவு மற்றும் தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 1960 ஆம் ஆண்டு புதுப்பிக்கபட்டு இன்று வரை உபயோகத்தில் உள்ள இந்த லைட் ஹவுஸை தொண்டு நிறுவம் ஒன்று பராமரித்து வருகிறது. 

உணவு மற்றும் தங்கும் வசதியுடன்.. 
"இந்த பகுதியில் கடந்த 40 ஆண்டு காலமாக நான் பணியாற்றி வருகிறேன்.மிகவும் மோசமான நிலையில் இருந்த இந்த லைட் ஹவுஸை புதிப்பித்து, பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தின் மூலம் வருமானம் ஈட்டும் நோக்கில் இதை பராமரித்து வருகிறோம்"என்று அந்த பகுதி மேயர் பட் கூறியுள்ளார்."இந்த லைட் ஹவுஸ் அமைந்திருக்கும் இடம் மிகவும் தனித்துவமானது.இதில் இடம் பெற்றிருக்கும் உணவு மற்றும் தங்கும் இட வசதியோடு கூடிய கலங்கரை விளக்கத்தை பல இடங்களில் ஏன், நீங்கள் எங்குமே வேறு பார்த்திருக்க முடியாது என்று சொல்லலாம்"என்று கூறியுள்ளார்.

வேலைக்கான தகுதி :
இந்த கலங்கரை விளக்கத்தை பார்த்துக்கொள்வதற்காக ஆட்கள் தேடபட்டு வரும் இந்த நேரத்தில், அவர்களுக்கான தகுதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருந்தோம்பலில் சிறந்தவர்களாக, கடல் பயணங்கள் பற்றிய போதிய அறிவுடன், கப்பல் இயக்க சென்ஸும் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்கு இருவருக்கு சேர்த்து 91 லட்சம் சம்பளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வரலாற்று சிறப்பு மிக்க இந்த கலங்கரை விளக்கத்தில் இவ்வளவு பெரிய சம்பளத்தில் வேலை செய்ய இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

News Counter: 
100
Loading...

aravind