சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் கல்குவாரிகள்..!

share on:
Classic

குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளை இழந்து வரும் சென்னை வாழ் மக்களின் தாகம் தீர்க்கும் இடமாக கைவிடபட்ட கல்குவாரிகள் மாறி வருகின்றன.

கோடை காலத்தில் சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் தண்ணீர் வற்றி வருகின்றன. இதனால் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக கைவிடப்பட்ட கல் குவாரிகளில்  தேங்கி நிற்கும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது.

 

சென்னை மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரத்தில் கைவிடப்பட்ட கல்குவாரி ஒன்று தற்போது சென்னை வாழ் மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்த்து வருகிறது. இதே போன்று 2017 மற்றும் 2018ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் போது இந்த குவாரியில் இருந்து தான் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது. 

 

உயிர் வாழ்வதற்கு தேவையான நீரை இந்த கல்குவாரிகள் வழங்கினாலும் அதனால் சில உடல்நல பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காரணம், நீண்ட காலமாக கல்குவாரிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நோய் தொற்று ஏற்படும் என்றும்,  குவாரிகள் பயன்பாட்டில் இருந்த போது பயன்படுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் நீரில் கலந்திருக்க வாய்ப்புள்ளதால் உடல் உபாதைகள் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

 

குவாரிகளில் இருந்து நீரை எடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கும் முன்னர் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் அதற்கான ஆணையை அளித்திருக்க வேண்டும் என்றும், அதேபோல் நீரின் தரம் குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இது போன்ற எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை என்பது கவலையளிக்க கூடிய ஒன்று.

 

குடிநீர் ஆதாரங்களை அரசு கவனத்தில் கொண்டு அவற்றை உரிய முறையில் பாதுகாக்காத்து பராமரித்தால் மட்டுமே  கோடை காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை என்ற வார்த்தை கணிசமாக குறையும்..

 

News Counter: 
100
Loading...

aravind