விஜய் Vs விஜய் சேதுபதி... வெல்லப்போவது யார்....?

share on:
Classic

சங்கத்தமிழன் படத்தை தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டம்

வாலு படம் மூலம் தமிழ் சினிமாக்கு இயக்குநரா அறிமுகமானவர் தான் விஜய் சந்தர். அந்த படத்துக்கு பிறகு விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தை இயக்கிய இவர் தற்போது விஜயா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தை  இயக்கிட்டு வராரு.  இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிக்க,  காமெடி கேரக்டர்"ல  சூரி நடிச்சிருக்காரு. இவங்க மட்டுமில்லாம  நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் , ஸ்ரீமான் என பலரும் இந்த படத்தில் நடிச்சிட்டு வராங்க. இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் இந்த படத்திற்கு இசையமைச்சிட்டு வராங்க. சங்கத்தமிழன் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகிருக்கு. ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த சங்கத்தமிழன் படத்தை வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்காங்கலாம்.  மேலும் விஜய் நடிப்பில் உருவாகும் பீகில் படமும்  தீபாவளி பண்டிகையில் வெளியாக இருப்பதால் நடிகர் விஜய் சேதுபதியும் தீபாவளி ரேசில் இணைந்துருக்காரு

News Counter: 
100
Loading...

Padhmanaban