சஞ்சய் தத் போல, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்..! வலுக்கும் கோரிக்கை...

share on:
Classic

மத்திய அரசின் அனுமதியில்லாமல் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதைப் போலவே, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது.

28 ஆண்டு காலமாக சிறையில் இருப்பது தூக்கு தண்டனையை விட கொடுமையானது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்ட்ரா அரசு சஞ்சய் தத்தை விடுதலை செய்ததைப் போலவே, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை மாநில அரசே விடுதலை செய்யலாம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்றமே தடையாக இல்லாதபோது, 7 பேரையும் விடுதலை செய்யாமல் இருப்பது எந்த வகையில் நியாயம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தான் அரசின் எண்ணம் என கூறினார்.

நடிகர் சஞ்சய் தத்தின் விடுதலையை முன்னுதராணமாக எடுத்துக்கொண்டு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மாநில அரசே விடுதலை செய்ய முன்வர வேண்டும் என்பதே பல்வேறு கட்சித் தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan