சப்போட்டா பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்...

share on:
Classic

தற்போது, சப்போட்டா பழ சீசன் துவங்கிவிட்டதால், எங்கு பார்த்தாலும் மிகக் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. கிலோவுக்கு ரூ. 30 லிருந்து சந்தைகளில் கிடைக்கிறது.

சப்போட்டா பழத்தில் பல சத்துக்கள் நிரைந்துள்ளது. அவற்றை சாப்பிடுவதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதில் நிரைந்துள்ள சில சத்துப் பொருட்களும், வைட்டமின்களும் இரத்த நாளங்களை சீராக வைத்து கொள்ள உதவும். மேலும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு குணமும் இதற்கு உண்டு.

எப்படி சாப்பிட்டால், என்ன நன்மை கிடைக்கும்..?
கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டாவிற்கு உண்டு.

சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மை கொண்டது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்கு செல்லும் முன், ஒரு கிளாஸ் சப்போட்டா ஜூஸ் குடித்தால், நன்கு தூக்கம் வரும்.

ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழ ஜூஸ் குடித்துவிட்டு, பிறகு ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் சிறந்த இயற்கை மருந்தாகும்.

பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா பழக் கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தையுடன் கொஞ்சம் கருப்பட்டி சேர்த்து பொடியாக்கி நன்கு காய்ச்சிக் குடித்தால், காய்ச்சல் குணமாகும்.

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

News Counter: 
100
Loading...

aravind