சாரதா நிதி நிறுவன மோசடி: 3-வது முறையாக ராஜிவ் குமார் சிபிஐயில் ஆஜர்

share on:
Classic

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமார் மூன்றாவது முறையாக  சிபிஐ அதிகாரிகள் முன் இன்று ஆஜராகிறார்.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சில ஆவணங்கள் மாயமானது தொடர்பாக, கொல்கத்தா ஆணையர் ராஜீவ்குமார், சிபிஐ விசாரணைக்கு  ஒத்துழைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மேகலயா மாநிலம், ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில், இரு முறை கொல்கத்தா காவல் ஆணையர் ராஜிவ் குமார் ஆஜரானார். அவரிடம், சாரதா நிதி நிறுவன வழக்கில் மாயமான ஆவணங்கள் குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும், சிபிஐ அதிகாரிகள் பல மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்காக ராஜிவ் குமார் மீண்டும் இன்று ஆஜராகிறார்.

News Counter: 
100
Loading...

aravind