சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்..!

share on:
Classic

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சென்னையில் காலமானார்.

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தக்குமார் கொலை வழக்கில், சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 9ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதியின் முன்பு ராஜகோபால் ஆஜரானார். அப்போதும் அவர், உடல்நிலை காரணமாக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டார். இதனைத் தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராஜகோபாலின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் ராஜகோபாலை அனுமதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை 10.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

News Counter: 
100
Loading...

Ragavan