சசிகுமார் படத்திற்கு ’ராஜா வம்சம்’ என தலைப்பு வைத்த படக்குழு..!!

share on:
Classic

சசிகுமார் படத்திற்கு  ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் பல புதுமையான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார், இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பேட்ட, இந்த படத்தில் ரஜினியின் நண்பனாக சில நிமிடம் மட்டுமே வந்தாலும், அவரது கேரக்டர் ரசிக்கும் படி இருந்தது. 

பேட்ட படத்தை தொடர்ந்து நாடோடிகள் 2, கொம்புவச்ச சிங்கம்டா, கென்னடி கிளப் போன்ற படங்கள் அடுத்ததடுத்து வெளியாக இருக்கு. இப்போது கே.வி.கதிர்வேலு இயக்கத்திலும், என்.வி.நிர்மல்குமார் இயக்கத்திலும் நடித்து வருகிறார்.

இதில் கே.வி.கதிர்வேலு இயக்கும் படத்திற்கு ராஜ வம்சம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சசிகுமார்க்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan