வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-31 செயற்கைகோள்

share on:
Classic

இஸ்ரோவின் 40-வது தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்-31 செயற்கைகோள், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமா விண்ணில் பாய்ந்தது.

நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை பெருக்கும் வகையில், அதிநவீன செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில், 40-வது செயற்கை கோளாக ஜிசாட்-31-ஐ இஸ்ரோ தயாரித்துள்ளது. இது, ஐ-2கே பஸ் வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கைகோளாகும்.  2535 கிலோ எடை கொண்ட இந்த ஜிசாட்-31 செயற்கைகோள், ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து இன்று அதிகாலை விண்ணில் பாய்ந்தது. 

இந்திய நேரடிப்படி அதிகாலை 2.31 மணிக்கு இந்த செயற்கைகோளை, ஏரியன்-5 ராக்கெட் ஏந்திச் சென்றது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு விண்ணில் பயணித்து சேவையாற்ற உள்ள இந்த செயற்கைகோளால், இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிடிஹெச் சேவை, டிவி ஒளிபரப்பு உள்ளிட்டவற்றுக்கும் ஜிசாட்-31 செயற்கைகோள் பயன்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 

News Counter: 
100
Loading...

aravind