"மறு வாக்குப்பதிவு குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்"

share on:
Classic

தருமபுரி, திருவள்ளூர் உள்ளிட்ட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்பப்படுடள்ளதாக சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தருமபுரி, கடலூர், திருவள்ளூர் மக்களவை தொகுதிகளில் உள்ள 10 வாக்குச்சாவடி மையங்களில் கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சத்ய பிரதா சாஹூ, முறைகேடு நடந்த வாக்குச்சாவடிகள் குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், பொதுப் பார்வையாளரும் இணைந்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிகை அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். அதன்படி, தேர்தல் நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth