வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரியுடன் சத்யபிரதா சாகு ஆலோசனை..!

share on:
Classic

வேலூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார்.

வேலூரில் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததை அடுத்து ரத்து செய்யப்பட்ட மக்களவைத் தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மீண்டும் நடைபெறுகிறது. இதையடுத்து, வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முகசுந்தரத்துடன் காணொலி காட்சி மூலமாக சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தினார். இதில் காவல்துறை உயர் அதிகாரிகள், தேர்தல் அலுவலகர்கள் கலந்து கொண்டனர். வேலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News Counter: 
100
Loading...

Ragavan