கமல் மீதான புகார் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் விசாரணை - சத்யபிரத சாகு

share on:
Classic

கமல்ஹாசன் மீதான புகார் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 4 தொகுதி இடைத்தேர்தலில் 15,000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், நாளை மறுநாள் 45 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, இன்று மாலை 6 மணிக்கு தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படுவதாக கூறினார். கமல்ஹாசன் மீதான புகார்கள் குறித்து அந்தந்த மாவட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். மேலும், பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு குறித்து 21-ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும் சத்ய பிரதா சாகு கூறினார். மேலும், தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றப்படும் என்றும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan