வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து ஆலோசனை..!

share on:
Classic

வாக்கு எண்ணிக்கை பணிகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் துணை தேர்தல் ஆணையர்கள் சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம், கேரளா, குஜராஜ் ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களை ஒருங்கிணைத்து வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள் குறித்த பயிற்சி முகாம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. 

இதில் துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி வழங்க உள்ளனர். இந்த பயிற்சி முகாமில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா மற்றும் 3 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind