பாகிஸ்தானுக்கு உதவும் சவூதி அரேபியா : ரூ. 71,000 கோடி முதலீடு செய்ய திட்டம்

share on:
Classic

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு உதவும் வகையில், அந்நாட்டில் 71,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய சவூதி அரேபியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானிற்கு உதவும் வகையில் சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. பெட்ரோலியப் பொருட்களுக்காக பாகிஸ்தான் செலுத்த வேண்டிய தொகையையும் பின்னர் செலுத்தலாம் என்றும் இரண்டு நாடுகளும் தெரிவித்திருந்தன.

இந்நிலையில்,பாகிஸ்தானுக்கு கடந்த வாரம் வருகை தந்த சவூதி அரேபிய எரிசக்தி துறை அமைச்சர் காலித் அல்ஃபோலி, அங்கு சீனா மேற்கொண்டு வரும் குவாடர் துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள ஆழ்கடல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ள பகுதியை பார்வையிட்டார். அப்போது, அந்த ஆலையில் 1,000 கோடி டாலர்(71,000 கோடி ரூபாய்) முதலீடு செய்வது குறித்து சவூதி அரசு திட்டமிட்டு வருவதாக அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியாக, குவாடர் துறைமுகத்தை சீனா மேற்கொண்டு வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தத் திட்டத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya