கோடநாடு வீடியோ விவகாரத்தில் கைதான சயன், மனோஜ்க்கு ஜாமின்

share on:
Classic

கோடநாடு வீடியோ விவகாரத்தில் கைதான சயன், மனோஜ் ஆகியோருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது

கோடநாடு கொள்ளை, கொலை வழக்கில் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை தொடர்புபடுத்தி பேட்டியளித்த சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை தமிழக குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கேரளாவைச் சேர்ந்த சயன் மற்றும் மனோஜை நீதிமன்ற காவலில் அனுப்ப முகாந்தரம் இல்லை என எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இருவரும் தனிநபர் உத்தரவாதம் அளிக்கும் பட்சத்தில் பிணை வழங்கப்படும் என எழும்பூர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இருவரும் தலா 10 ஆயிரம் ரூபாய் பிணைத் தொகை மற்றும் தலா 2 பேரின் உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

பிணைக்கு உத்தரவாதம் கொடுத்தவர்களின் வங்கி ஆவணங்களை வரும் திங்கட்கிழமை சமர்பிக்க ஆணை.

News Counter: 
100
Loading...

aravind