இனி ரூ 20,000 மட்டுமே... SBI அதிரடி..!

share on:
Classic

பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

எஸ்பிஐ எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏடிஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை நாற்பதாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாயாகக் குறைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.  

அதன்படி, கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு  20 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. 

மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி ,  டிஜிட்டல் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்  வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  எஸ்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது. எஸ்பிஐயின் புதிய அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind