Fixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..! SBI அதிரடி..!

share on:
Classic

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 4.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை, அதாவது Fixed Deposit-க்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் வரை குறைத்துள்ளது. நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை எஸ்பிஐ 7 முதல் 45 நாட்கள் முதிர்ச்சியுடன் தற்போதுள்ள 5 சதவீதத்திலிருந்து 4.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.

உபரியான பணப்புழக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்த வட்டி வீத சூழ்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எஸ்பிஐ தனது கால வட்டி விகிதத்தை மறு சீரமைத்துள்ளது. இந்த வட்டி விகிதம் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என்று எஸ்.பி.ஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய மற்றும் முக்கிய பங்கு வகிக்கும் வங்கியான எஸ்.பி.ஐ, Fixed Deposit-க்கான வட்டி விகிதத்தை குறைத்ததை தொடர்ந்து, மற்ற கடன் வழங்கும் வங்கிகளும் இந்த நடவடிக்கையை பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan