எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட் தேர்வு முடிகள் ஜூலை இறுதிக்குள் வெளியாக வாய்ப்பு...!

share on:
Classic

எஸ்பிஐ எழுத்தர் முடிவு 2019: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜூனியர் அசோசியேட் முடிவை sbi.co.in என்ற இணையதளத்தில் ஜூலை இறுதிக்குள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ கிளார்க் ஆட்சேர்ப்பு 2019 க்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வை, ஜூன் 22 ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நடத்தியது. எஸ்பிஐ கிளார்க் முடிவு 2019 ஜூலை இறுதிக்குள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வலைத்தளமான sbi.co.in-ல் தேதியை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. எஸ்பிஐ 2019 ஜூனியர் அசோசியேட் பதவிக்கு விளம்பரப்படுத்தப்பட்ட மொத்த எண்ணிக்கைகள் 8,653 என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஆட்சேர்ப்பு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. 

எஸ்பிஐ 2019 ஜூனியர் அசோசியேட் மதிப்பெண்களை அறிய கீழே பட்டியலிடப்பட்ட படிகளைப் பின்பற்றி மதிப்பெண்களை சரிபார்க்கலாம்.

1. எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in-ஐ பார்க்கவும். 

2. ‘SBI Prelim Result 2019’ என்ற tab-ஐ கிளிக் செய்யவும். 

3. எஸ்பிஐ 2019 முடிவு சாளரத்தில் திருப்பி விடப்படுவீர்கள், தேவையான விவரங்களை இங்கே பூர்த்தி செய்யவும். 

4. எஸ்பிஐ ப்ரீலிம் (Prelim) முடிவு 2019, எஸ்பிஐ எழுத்தர் முடிவு 2019, எஸ்பிஐ ஜூனியர் அசோசியேட் முடிவு 2019 ஆகியவற்றைக் காணலாம் மற்றும் பதிவிறக்கமும் செய்யலாம்       

எஸ்பிஐ ப்ரீலிம் கிளார்க் 2019 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்த சுற்று தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள், அதாவது ஆகஸ்ட் மாதம் திட்டமிடப்பட்டுள்ள எஸ்பிஐ மெயின் 2019 தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

udhaya