SBI வங்கியின் புதிய 'FD' விவரங்கள்... வாருங்கள் முதலீட்டாளர்களே...!

share on:
Classic

எஸ்.பி.ஐ  ஃபிக்சட் டெபாசிட் கணக்கின் புதிய வட்டி விகிதம், முதலீட்டு வரம்புகள், காலம், பிற விவரங்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

எஸ்.பி.ஐ-ன் ’FD’ (Fixed deposit) கணக்கில் குறைந்தபட்ச முதலீடு வரம்பு ரூ.1,000 ஆகும். இதே ’FD’ கணக்கில் அதிகபட்ச வரம்பை எஸ்.பி.ஐ நிர்ணயிக்கவில்லை. எஸ்.பி.ஐ வங்கி அதிகமான வைப்பு திட்டங்களை (deposit schemes) வழங்குகிறது. வங்கியால் அளிக்கப்படும்’FD’ திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட வருமானத்தை (assured returns) பெற முடியும். டெபாசிட்டர் மொத்த தொகையை நிறுத்தல், வட்டி செலுத்துதல் பணப்புழக்கத்தை தேர்வு செய்தல் மற்றும் ஓவர்டிராஃப்ட் (OD) அல்லது முன்கூட்டியே திரும்பப்பெறல் போன்ற அம்சங்களை வழங்குவது போன்ற ’FD’ கணக்கு குறித்த விவரங்களை ’sbi.co.in’ என்ற வலைதளத்தில் கடன் வழங்குபவர் பதிவு செய்து வருவார்கள். மே 9, 2019 முதல் திருத்தம் செய்யப்பட்ட ’FD’ வட்டி விகிதங்களை எஸ்.பி.ஐ அமல்படுத்தியுள்ளது.

எஸ்.பி.ஐ-ன் ’FD’ கணக்கு பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்:

1. எஸ்.பி.ஐ-ன் ’FD’ கணக்கில் குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1,000 ஆகும். அதிகபட்ச வரம்பை எஸ்.பி.ஐ நிர்ணயிக்கவில்லை.  

2.  எஸ்.பி.ஐ-ன் ’FD’ திட்டங்களில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்.  

3. கணக்கு ஆரம்பிக்கும் நேரத்தில் நம் விருப்பத்தை பொறுத்தே மாதம் அல்லது காலாண்டுக்கான வட்டி முறையை தேர்ந்தெடுக்கலாம். எஸ்.பி.ஐ-ல் மாதாந்திர வட்டியை தேர்ந்தெடுத்தால் தள்ளுபடி செய்யபட்ட வட்டி விகிதம் மட்டுமே செலுத்தப்படும்.          

4. ’FD’-ல் ரூ. 10,000-க்கும் மேல் செலுத்தியுள்ள மூத்த குடிமக்களுக்கு 0.25% கூடுதல் வட்டி கிடைக்கும்.   

5. ரூ. 2 கோடிக்கு மேல் ’FD’-ல் முதலீடு செய்தவர்களுக்கு 5.75-6.75 சதவீதம் வட்டி விகிதமாக எஸ்.பி.ஐ நிர்ணயித்துள்ளது. கீழ்க்கண்ட ’FD’ வட்டி விகிதங்கள் 2019-ம் ஆண்டு மே 9-ம் தேதி முதல் திருதம் செய்யப்பட்ட ’FD’ வட்டி விகிதங்கள் என இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

              காலம்
         பொது மக்கள் (% p.a.)
    மூத்த குடிமக்கள் (% p.a.)
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 5.75 6.25
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை  6.25 6.75
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 6.35 6.85
211 நாட்கள் முதல் 1 வருடம் வரை 6.4 6.9
 1 ஆண்டு முதல் 2 வருடம் வரை
7 7.5
2 ஆண்டுகள் முதல் 3 வருடம் வரை 6.75 7.25
3 ஆண்டுகள் முதல் 4 வருடம் வரை 6.7 7.2
4 ஆண்டுகள் முதல் 5 வருடம் வரை 6.6 7.1

6. எஸ்.பி.ஐ-ன் ’FD’-ல் எந்த அறிவுறுத்தலும் இல்லை என்றால் முதிர்வு தொகையை (maturity value) அதே வைப்புத் திட்டத்தில் தானாகவே செலுத்தப்படும்.          

7. ’FD’-ல் கிடைக்கும் வட்டி, வரிக்கு உட்பட்டது. வாடிக்கையாளர்கள் ஃபார்ம் 15G/15H-ஐ (Form 15G/15H) சமர்ப்பிக்கவில்லையெனில், TDS கழிக்கப்படும் என எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது.    

8. ’FD’-ல் இருந்து ஸ்பெஷல் ’FD’-ஆகவும், ஸ்பெஷல் ’FD’-ல் இருந்து ’FD’-ஆகவும் ஒரே ’FD’ வீதத்தில் மாற்றிக்கொள்ளலாம்.     

9. முன்கூட்டியே ’FD’-ல் இருந்து பணத்தை திரும்பப் பெற்றால் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ரூ. 5,00,000 வரை முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற்றால் 0.50% அபராதமாக வசூலிக்கப்படுகிறது. ரூ. 5,00,000-ல் இருந்து ரூ. 1 கோடி வரை முதலீடு செய்தவர்கள் முன்கூட்டியே பணத்தை திரும்பப் பெற்றால் 1% அபராதமாக வசூலிக்கப்படுகிறது.          

10. எஸ்.பி.ஐ-ன்’FD’ கணக்கில் நியமனம் (nomination) மற்றும் கடன் வசதிகள் உள்ளன.

News Counter: 
100
Loading...

udhaya