புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Classic

புதுச்சேரியில் பாஜக.வை சேர்ந்த 3 நியமன எம்எல்ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நியமன எம்எல்ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. அவர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனை ஏற்க முதலமைச்சர் நாராயணசாமி மறுத்துவிட்டார்.

இதுதொடர்பான வழக்கில் 3 நியமன எம்.எல்.ஏ.-க்களின் நியமனம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 நியமன எம்.எல்.ஏ.-க்கள் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்து, உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் தலையிட மாநில அரசுக்கு உரிமை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

News Counter: 
100
Loading...

sasikanth