மாயாவதி கோரிக்கை நிராகரிப்பு..!

share on:
Classic

தேர்தல் பிரசாரம் செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான மாயாவதி முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கடந்த 7-ஆம் தேதி சகரன்பூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவாதி, மத உணர்வை தூண்டும் படி பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் 48 மணி நேரத்திற்கு மாயாவதி பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனை எதிர்த்து பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால், மாயாவதி கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், வெறுப்புணர்வை தூண்டும் அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு தடை விதிக்கும் ஆணையத்தின் முடிவு ஏற்கப்படுவதாக தெரிவித்தது.

News Counter: 
100
Loading...

Ragavan