கர்நாடாகா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கள் இன்று விசாரணை..!

share on:
Classic

கர்நாடாகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக சபாநாயகர், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் அதிருப்தி காரணமாக காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி எம்.எல்.ஏக்கள் 16 பேர் தற்போது வரை ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே, 10 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ராஜினாமா கடிதம் மீது முடிவு எடுக்க சபாநாயகர் வேண்டுமென்ற காலம் தாழ்த்துவதாக மனுவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டினர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது இன்று காலை 10 மணிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என சபாநாயகருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ராஜினாமா குறித்து முடிவெடுக்க கூடுதல் அவகாசம் கோரி கர்நாடகா சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சபாநாயகர் தொடரந்த வழக்கை உடனடியாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் வழக்கோடு இன்று விசாரிக்கப்படும் என தெரிவித்தது.

News Counter: 
100
Loading...

Ragavan