3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பெண்குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை !!

share on:
Classic

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்க 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள், காலணிகள், புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை அரசு விலையில்லாமல் வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு சத்துணவும் வழங்கப்படுகிறது. மேலும் உயர்நிலைப்பள்ளி மற்றும் அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 28,757.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். மேலும் மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ. 1362.27 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். பள்ளிக்கல்வித்துறையில் புத்தகப்பை, காலணிகள், நோட்டுப் புத்தகங்கள், பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை விலையில்லாமல் வழங்குவதற்கு ரூ.1656 கோடியும்,

மடிக்கணினி வழங்குவதற்கு ரூ.1362 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஓ.பி.எஸ் தெரிவித்தார். மேலும் 2011-12-ம் ஆண்டில் 63,178ஆக இருந்த பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை, 2018-19 ஆம் ஆண்டில் 33,519ஆக குறைந்துள்ளது எனவும் கூறினார். மேலும் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில், 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு ரூ.48.70 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ramya