"ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்"

share on:
Classic

கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாதம் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை நடைபெறும் மூன்றாம் பருவ பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 13-ம் தேதி நிறைவடைகிறது.இதையடுத்து, ஏப்ரல் 14 முதல் 50 நாட்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின், ஜூன் 3-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், பள்ளிகள் திறக்கப்படும் அன்றே மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்களை வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

sajeev