தேர்தல் நெருங்குவதால் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க உத்தரவு..!

share on:
Classic

தேர்தல் நெருங்குவதால் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ஏப்ரல் 1 முதல் 12-ஆம் தேதிக்குள்ளாக நடத்தி முடிக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 6 முதல் 9- ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதியுடன் முழு ஆண்டு தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்குவதால் முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி இயக்குநரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் தேர்தல் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் பள்ளிக்கல்வி இயக்குநரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 

News Counter: 
100
Loading...

vinoth