பிரதமர் மோடியை சிரிக்க வைத்த சிறுமி...அப்படி என்ன சொன்னார்?

share on:
Classic

பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் திட்டமாகிய 'அக்ஷய பாத்திர' திட்டத்தின் மூலம் 3 பில்லியன் குழந்தைகளுக்கு உணவளித்ததை கொண்டாடும் விதத்தில்,  ஒரு பள்ளிக்கு விருந்தினராக அழைக்கப்பட்ட மோடியிடம் பிரதமர் சிறுமி ஒருவர் குறும்பாக பேசியது வைரலாகி வருகிறது.

குழந்தைகள் காத்திருப்பு :
'அக்ஷய பாத்திர' திட்டம் என்பது பெங்களூரை தலைமையிடமாக கொண்ட தொண்டு நிறுவனம். இதன் மூலம் தினமும் பல ஆயிர பள்ளி மாணவர்கள் மதிய உணவு பெறுகின்றனர். இந்நிலையில் 3 பில்லியன் குழந்தைகளுக்கு உணவளித்ததை கொண்டாடும் விதத்தில் உத்தரபிரதேச மாநிலம் 'விருந்தாவன்' பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் 20 ஏழை குழந்தைகளுக்கு உணவளிப்பதற்க்கு சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவிற்கு அவர் தாமாதமாக வரவும் குழந்தைகள் வெகு நேரமாக பசியோடு காத்திருந்தனர்.

 

சிறுமியின் குறும்பு பேச்சு:
பிரதமர் மோடி இந்த விழாவில் தான் குழந்தைகளோடு பேசுவதை போன்ற ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  குழந்தைகளுக்கு உணவளிக்கும் போது அங்கிருந்த ஒரு சிறுவனிடம் அவர் " 12 மணிக்கு உங்களுக்கு மதிய உணவு வழங்க பட்டிருக்கணும், பிரதமர் தாமதமாக வந்ததால் தான் உணவு தாமதம் ஆகியது அல்லவா?" என்று கேட்கிறார். அதற்கு அருகில் இருந்த ஒரு சிறுமி "நாங்க காலையிலேயே சாப்பிட்டு விட்டு தான் வந்தோம்" என்று சொல்லவும் மோடி சிரித்து விடுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வளைத்தலங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.  

 

News Counter: 
100
Loading...

youtube