தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றம்..?

share on:
Classic

தமிழகத்தின் வெப்பத்தின் தாக்கத்தைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 3-ம் தேதி திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் அதிகரித்து வரும் வெப்பம் மற்றும் வெப்ப அலையின் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க  ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து மே இறுதி வாரத்தில் நிலவும் பருவநிலையைப் பொறுத்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பின், ஜூன் 2-வது வாரம் வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind