புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி நாகை, மன்னார்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

share on:
Classic

நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் வீசிய கஜா புயல் காரணமாக நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்கள்  மாவட்டம் கடும் பாதிபை சந்தித்தன. புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து திருவாரூர், மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

sasikanth