ஆஸ்திரேலியா பிரதமருக்கு மூன்று கால்களா? - கேலிகூத்தான பேஸ்புக் போஸ்ட்

share on:
Classic

ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசனின் பேஸ்புக் பக்கத்தில் அவரது குடும்பத்தோடு எடுத்த புகைப்படம் பதிவிடப்பட்டது .அதில் அவருக்கு இரண்டு இடது கால்கள் இருப்பது போன்று உள்ளதால் நெட்டிசன்களிடம் மரண கலாய் வாங்கி வருகிறார்.

ஆஸ்திரேலியாவில் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேஸ்புக் பக்கத்தில் அவர் குடும்பமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இன்று பதிவு செய்யப்பட்டது.

அந்த புகைப்படத்தில் அவருக்கு இரண்டு இடது கால்கள் இருப்பது போல தோற்றமளித்து.காண்போர் அனைவரையும் நகைப்படைய செய்துவிட்டது 

photoshop மென்பொருள் மூலம் காலணிகளில் உள்ள அழுக்கை மாற்ற செய்த முயற்சி இரண்டு இடது கால்கள்  இருப்பது போல  தவறாகிவிட்டது என்றும் இது மோரிசனுக்கு தெரியாமல் அவ்வாறு செய்யப்பட்டதாகவும்  அவர் அந்த புகைப்படத்தை பதிவிட அனுமதி அளிக்கவில்லை என்றும் மொரீசின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஆஸ்திரேலியா பிரதமர் மோரிசன் படத்தில் காலணிகளைத் திருத்தாமல், தம் தலையில் இருந்த சொட்டையைத் திருத்தியிருக்கலாம் என்று அவர் Twitter-இல் வேடிக்கையான ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

News Counter: 
100
Loading...

youtube