ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீஸார் தீவிரம்..?

Classic

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர் 21 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வருகிறார். முன்னதாக பொதுமக்களிடம் பல கோடி வசூலித்து ஏமாற்றியதாக அம்பிடண்ட் நிறுவனம் மீது புகார் எழுந்தது. அந்நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி இருந்தது. 

இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி அம்பிடண்ட் நிறுவன அதிபரிடம் ரெட்டி மோசடியில் ஈடுபட்டார். இந்நிலையில்  ஜனார்த்தன ரெட்டியை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

News Counter: 
100

aravind