மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் : ப. சிதம்பரம் பேட்டி..

share on:
Classic

மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி நிச்சயம் 7வது முறை வெற்றி பெறும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்தார். 

சிவகங்கை கந்தலூர் சித்தலாட்சி உயர்நிலைப் பள்ளியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது வாக்கினை பதிவு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழக மக்கள் மத்திய அரசு, மாநில அரசு மாற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். சுயமரியாதை , பகுத்தறிவு, ஜனநாயகம், சுதந்திரம், அனைவரும் சமம், தமிழினத்தின் மாண்பு ஆகியவற்றை காப்பதற்காக தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும். நிச்சயம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். 6 முறை இந்த கூட்டணி நாடாளுமன்றத் தெர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 7-வது முறையும் இக்கூட்டணி வெற்றி பெறும்” என்று தெரிவித்தார்.
 

News Counter: 
100
Loading...

Ramya