'சீமத்துரை' படம் வெற்றி அடையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Classic

புவன் மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் இயக்கத்தில், கீதன் மற்றும்  வர்ஷா பொல்லம்மா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சீமத்துரை'.

'96' படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்து அசத்தியிருந்த வர்ஷா 'சீமத்துரை' படத்திலும் கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் வெட்கம் நிறைந்த கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வர்ஷாவின் திறமை அடுத்தகட்டத்திற்கு சென்றிருப்பதாக  படத்தை கண்டு ரசித்தவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், படத்தின் ஹீரோ கீதனின் நடிப்புத்திறனுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபகால தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் 'சீமத்துரை' முக்கியமான இடத்தை பிடித்து வெற்றி அடையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

mayakumar