மீண்டும் விபத்தை ஏற்படுத்தியது “டெஸ்லா” செல்ஃப் ட்ரைவிங் கார்

share on:
Classic

பிரபல ரோபோட் நிறுவனமான பிரோமோபோட் (Promobot) நிறுவனத்தின் தயாரிப்பான வி4 ரோபோட் வகையைச் சேர்ந்த ரோபோட் மீது டெஸ்லா (Tesla) செல்ஃப் டிரைவிங் கார் (Self driving car) மோதியதில் ரோபோட் முழுவதுமாக சேதமடைந்து.

மீண்டும் விபத்தை ஏற்படுத்திய டெஸ்லா கார்:
லாஸ் வேகாசில் சி.இ.எஸ் (CES) என்ற எலக்ட்ரானிக் கண்காட்சி நடைபெற்றது. இதில் பிரோமோபோட் நிறுவனம் தனது புதிய அறிமுகமான மனித உருக்கொண்ட வி4 வகை ரோபோட்டை காட்சிப்படுத்துவதற்காக வந்திருந்தனர். பின்னர் ஏராளமான ரோபோட்கள் ஒரு பூத்தில் வரிசைப்படுத்தப்பட்டன. ரோபோட்கள் அதிகமாக இருந்ததால் அதில் ஒரு வரிசை மட்டும் சாலையில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சாலை வழியாக வந்த டெஸ்லா எஸ் மாடல் செல்ஃப் டிரைவிங் கார், வி4 ரோபோட்டை கடுமையாக சேதப்படுத்தியது.  

இதில் அந்த ரோபோட்டின் பாகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. மீண்டும் சரிசெய்ய முடியாத அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டதுள்ளதாக தெரிகிறது.

வினோதமான விபத்து:
சி.இ.எஸ் கண்காட்சியில் பங்கேற்பதற்காக தான் இந்த ரோபோட்டை அங்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் தற்போது கண்காட்சியில் பங்கேற்க முடியாமல் போனது மிகுந்த வேதனை அளிப்பதாக பிரோமோபோட் நிறுவனத்தின் இயக்குநர் தெரிவித்தார்.

மேலும் அந்த ரோபோட்டை ரெக்கவர் செய்ய முடியுமா என்று கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் அந்த காரின் உள்ளே ஒரு பயணி இருந்ததாகவும் அவர் காரை செல்ஃப் டிரைவிங் மோடில் வைத்து பயணித்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் ரோபோட் எப்படி சாலையில் சென்றது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

வருத்தம் தெரிவித்த கார் பயணி:
டெஸ்லா காரில் பயணித்த பயணி கூறும் போது தான் காரில் வந்த போது சாலையில் காரோ, மனிதர்களோ என யாருமே இல்லை. அதனால் தான் காரை செல்ஃப் டிரைவிங் மோடில் வைத்து இயக்கியதாக கூறினார்.

ஆனால் காரின் எதிரில் திடீரென ரோபோட் வந்ததால் இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனாலும் அந்த ரோபோட் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்ததாக கூறிய அந்த பயணி, விபத்தை ஏற்படுத்தியதற்கு மிகவும் வருந்துவதாகவும், ரோபோட்டை உருவாக்கிய பொறியாளர்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

News Counter: 
100
Loading...

aravind