காஞ்சனா இந்தி ரீமேக்கிலிருந்து விலகிய ராகவா லாரன்ஸ்..சுய மரியாதையே முக்கியம் எனவும் கருத்து..

share on:
Classic

காஞ்சானாவின் இந்தி ரீமேக்கான லக்‌ஷ்மி பாம் படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலகியுள்ளார். 

தமிழில் வெற்றியடைந்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்வதாக முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள், நடைபெற்று வந்தன. அக்‌ஷய் குமார் நடிப்பில் தமிழில் இப்படத்தை இயக்கிய ராகவா லாரன்ஸ் இந்தியிலும் படத்தை இயக்க ஒப்பந்தமானார். லக்‌ஷ்மி பாம் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. 

இந்நிலையில் படத்திலிருந்து விலகுவதாக லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், தனக்கு எந்த தகவலும் தெரிவிக்காமலும், எந்த ஆலோசனையும் நடத்தாமலும் போஸ்டரை வெளியிட்டதாக லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். மதியாதார் தலைவாசல் மிதியாதே என்ற பழமொழியை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள அவர், இந்த உலகத்தில் பெயர் புகழை விட, சுய மரியாதையே முக்கியம் என்பதால் அப்படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தனிப்பட்ட முறையில் நடிகர் அக்‌ஷய் குமாரை பெரிதும் மதிப்பதால், காஞ்சாவின் கதையை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ள லாரன்ஸ், வேறு இயக்குனரை வைத்து படத்தை தொடரட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya