சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

share on:
Classic

இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தபோதிலும் இந்திய பங்குச்சந்தை மற்றும் மும்பை பங்குச்சந்தை 2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.   

இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 553.82 புள்ளிகள் சரிந்து 39,529.72 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 177.90 புள்ளிகள் சரிந்து 11,843.75 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவிகிதம் குறைத்தபோதிலும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 2019 ஆம் ஆண்டு மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

இன்றைய அமர்வுகளில் பொதுத்துறை வங்கி, நிதி மற்றும் தனியார் வங்கி குறியீடுகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.மெட்டல், மீடியா, பார்மா மற்றும் ரியால்டி துறை அளவீடுகளும் ஒரு சதவீதம் வீழ்ச்சியடைந்தன.கெயில் இந்தியா 11.5 சதவீதம் சரிவடைந்து மிகப் பெரிய இழப்பை சந்தித்துள்ளது.

இண்டஸ் இண்ட் வங்கி, எஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, லார்சன் அண்ட் டூப்ரோ, பாரத் பெட்ரோலியம் மற்றும் டாட்டா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.

 கோல் இந்தியா, டைட்டன், ஹீரோ மோட்டோகார்ப், என்டிபிசி, பவர் கிரிட், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள்  உயர்ந்தன.

ஒட்டுமொத்தமாக  பங்குச்சந்தை இன்று மிகப்பெரிய சரிவை சந்தித்தது.  1,839 பங்குகள் குறைந்த நிலையில் முடிவடைந்தது.

நேற்று ரமலான் பண்டிகை என்பதால் பங்குச்சந்தை செயல்படவில்லை.
 

News Counter: 
100
Loading...

sajeev