இனி 'செட்ஆப் பாக்ஸ்' இருந்தால் தான் TV பார்க்க முடியும் ...!

share on:
Classic

தொலைக்காட்சி சேவைகளில் அறிமுகபடுத்தபட்டிருக்கும் புதிய விதிகளால் இனி எல்லார் வீடுகளிலும் செட் ஆப் பாக்ஸ்கள் கட்டாயமாகும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI.

குழப்பம் :
வரும் பிப்ரவரி முதல் ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலுக்கும் 'ஒரு விலை' என்பது நடைமுறைபடுத்தபட உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இனி தங்களுக்கு வேண்டிய சேனல்களை தாங்களே தேர்ந்தெடுத்து அவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இந்த புதிய நடைமுறைகள் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள போதிலும், இதனால் ஏற்பட போகும் நன்மைகளை யோசித்து இந்த மாற்றத்திற்கு தயாராக ஆரம்பித்துள்ளனர்.

புதிய செட்ஆப் பாக்ஸ் :
இதுவரை DTH சேவையில் கொடி கட்டி பறந்த நிறுவனங்களாகிய  Airtel, DishTV, TataSky தங்கள் வாடிக்கையாளர்களுக்கு செட்ஆப் பாக்ஸ்களை அவைகளே வழங்கி வந்தன. விஷியம் என்னவென்றால் மக்கள் இந்த புதிய விதிகளுக்கு ஏற்றார் போல புதிய செட்அப் பாக்ஸ்களை வாங்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இதுவரை கேபிள் டிவியை பயன்படுத்தி வந்தவர்களுக்கு அந்தந்த பகுதி கேபிள் ஆபரேட்டர்களே ஒரு புதிய set-top பாக்ஸை வழங்க வேண்டும். அது பிடிக்கவில்லை என்றால் தரம் வாய்ந்த வேறு செட்ஆப் பாக்ஸை வாடிக்கையாளர்கள் மாற்றி கொள்ளலாம். 

உங்கள் விருப்பம் :
சிறப்பான தொலைக்காட்சி அனுபவத்தை பெற, புதிய விதிகளுக்கு ஏற்றார்போல ஒரு செட் ஆப் பாக்ஸை விலைக்கோ அல்லது வாடகைக்கோ பெற்று கொள்ள வேண்டும். இனி DTH சேவை நிறுவனங்களோ, கேபிள் ஆப்பரேட்டர்களோ வாடிக்கையாளர்களிடம் இந்த DTH சேவையை தான் நீங்கள் பெற வேண்டும் என்று உங்களை வற்புறுத்த முடியாது. DTH சேவைகளை பொறுத்த வரை இனி வாடிக்கையாளர்களுக்கு முழு சுதந்திரமும் அளிக்கப்படும். தெளிவாக கூறவேண்டும் என்றால் இன்டர்நெட் சேவைக்கு எப்படி நமக்கு விருப்பமான Modem சேவையை பெற்றுக் கொள்ளுகிறோமோ அதே போல், இனி செட்ஆப் பாக்ஸையும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல மாற்றி கொள்ளலாம். 

நெருக்கடி :
ஒவ்வொரு செட்ஆப் பாக்ஸ்களும் ஒவ்வொரு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. ஆனால் இதற்கு பிறகு எல்லாருக்கும் ஒரே மாதிரியான தொலைக்காட்சி சேவைகள் தான் வழங்க படும். எனவே செட்ஆப் பாக்ஸ் நிறுவங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கு பிறகு செட் ஆப் பாக்ஸ் நிறுவனங்கள் எல்லா DTH சேவைகளுக்கும் ஏற்றார் போல தங்களது செட்ஆப் பாக்ஸ்களை தரம் உயர்த்த வேண்டும். அப்போது தான் நிலவும் இந்த கடும் போட்டியை சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

இப்பொது எதுவும் சொல்ல முடியாது :
இந்த புதிய விதிகளின்படி இனி ஒருவரது தொலைக்காட்சி பார்க்கும் அனுபவமே முற்றிலுமாக மாறும். TRAI நிறுவனம் கூறும் போது "இது ஒருவேளை சிறப்பாகவும் இருக்கலாம் இல்லை மோசமாகவும் மாறவும் வாய்ப்பிருக்கிறது. எனவே தற்போது எதுவும் கூற முடியாது. ஏனென்றால் எல்லாம் கணிப்பின் பேரில் தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. இது எந்த அளவில் சரியாக வருக்கிறது என்று சோதனையின் முடிவில் தான் தெரியும்" என்று கூறியுள்ளது. 

 

நம்பிக்கை :
செட்ஆப் பாக்ஸ்களின் இயங்குதன்மையை அதிகரிக்க நிறுவனங்களிடம் வற்புறுத்த இருப்பதாக TRAI நிறுவனம் கூறியுள்ளது. இது பற்றி கூறிய அந்நிறுவன தலைவர் R.S சர்மா " இந்த புதிய விதிகள் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதை நடைமுறைபடுத்த எவ்வளவு காலம் ஆகும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை . இந்த வருடத்திற்குள் எல்லாம் முழுமையாக ஒழுங்கப்படுத்தபடும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்

 

News Counter: 
100
Loading...

youtube