தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் ராஜினாமா..!!

share on:
Classic

மக்களவைத் தேர்தலுக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.

17-வது மக்களவைக்கான தேர்தலில் 10 சதவீத தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நாளை கூட உள்ளது. தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையில், தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து செயற்குழுவில் பேச உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகம் மற்றும் ஒடிசா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று அந்தந்த மாநில தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். ஒடிசா மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் எச்.கே.படில் தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பி உள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி 50,000 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளார். இந்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று அந்த மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan