அமித் ஷா நடத்திய பேரணியில் வன்முறை..!

share on:
Classic

கொல்கத்தாவில் அமித் ஷா நடத்திய பேரணியின் போது பாஜகவினர் மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில், 7வது கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சாலையில் பேரணி மேற்கொண்டனர். இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்ற நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அமித் ஷா வாக்கு சேகரித்தார். அப்போது, வித்யாசாகர் கல்லூரி விடுதி அருகே கூட்டத்தின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வீசியதால் வன்முறை வெடித்தது. 

வன்முறையைக் கட்டுக்குள் போலீசார் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வித்யாசாகர் கல்லூரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind