கடும் பஞ்சத்தில் தவிக்கும் வடகொரியா..!!

share on:
Classic

வட கொரியாவில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

வட கொரியாவில் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதால் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கிலான மக்கள் போதுமான உணவு இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. வடகொரியா சமீப காலமாக சர்வதேச பொருளாதார தடைகளால் கடுமையான பஞ்சத்தை சந்தித்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள கால நிலையில் ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக சுமார் 136 மில்லியண் டன் உணவு தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. ஐ நா மன்றத்தின் கணிப்புகள் இந்த ஆண்டு வடகொரிய மக்கள் நாள் ஒன்றுக்கு 300 கிராம் உணவை மட்டுமே உட்கொண்டு வரவதாக தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே வடகொரியாவில் கடுமையான உணவு தட்டுபாடு அதிகரித்து வருகிறது வடகொரியாவின் 70 விழுக்காடு மக்கள் அரசின் உணவு வினியோகத்தை நம்பி உள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு 500 கிராம் என உணவு வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தலா ஒருவருக்கு 300 கிராம் அளவுக்கே உணவு விநியோகிக்கப்படுகிறது. இது அடுத்த 6 மாதங்களுக்கு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan