இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - புதுச்சேரி தேவாலயங்களில் வெடிகுண்டு சோதனை..!

share on:
Classic

இலங்கையில் தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் போலீசார் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.

இலங்கை கொழும்புவில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட 8 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதன் எதிரொலியாக புதுச்சேரி ரயில் நிலையம் முன்பு உள்ள பசிலிகா இருதய ஆண்டவர், மிஷன் வீதியில் உள்ள தூய ஜென்மராக்கினி அன்னை ஆலயம், அவர் லேடி ஏஞ்சல்ஸ் சர்ச் உள்ளிட்ட முக்கிய தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து போலீசார் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர்.

News Counter: 
100
Loading...

Ragavan