கருத்துக் கணிப்பு எதிரொலி... அதிரடியாக உயர்ந்த பங்குச்சந்தை..!

share on:
Classic

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் மும்பை பங்குச்சந்தை இன்று ஒரேநாளில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் அதிகரித்துள்ளது

மக்களவைத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாயின. இதில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க அமோக வெற்றிபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை இன்று ஒரேநாளில் மட்டும் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் அதிகரித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,065 புள்ளிகள் உயர்ந்து 38,995  புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 325 புள்ளிகள் உயர்ந்து 11,732 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind