உலகக்கோப்பையில் புதிய உலக சாதனை படைத்தார் ஷாகிப்..

share on:
Classic

உலகக்கோப்பை லீக் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புதிய உலகசாதனை படைத்துள்ளார் பங்களாதேஷ் வீரர் ஷாகிப்.

ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் 35 ரன்களை கடந்த போது உலகக்கோப்பை வரலாற்றில் 1000 ரன்கள் மற்றும் 25-க்கும் மேற்ப்பட்ட விகெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கை அணியை சேர்ந்த எஸ்.ஜெயசூரியா 1165 ரன்கள் சேர்த்து 27 விக்கெட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் 1000 ரன்கள் சேர்த்த முதல் பங்களாதேஷ் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Saravanan