கோலியை பற்றி இப்படியா நெனச்சிகிட்டு இருந்தார் 'ஷேன் வாட்சன்'...!!

share on:
Classic

"கிரிக்கெட்டின் செயல்தந்திர முறைகள் அடிப்படையில், விராட் கோலி ஒரு சிறந்த கேப்டனாக இல்லாவிட்டாலும், ஒரு அணியின் தலைவனாக அவர் தான் உலகிலேயே சிறந்த கேப்டன்" என்று ஷேன் வாட்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.

கோலி ஒரு சிறந்த தலைவன்:
ஆஸ்திரேலிய அணியின் ஓய்வுபெற்ற முன்னாள் கேப்டன் 'ஷேன் வாட்சன்' ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு  அளித்துள்ள பேட்டியில் " தற்போது இருக்கும் சூழ்நிலையில் விராட் கோலி தான் சிறந்த கேப்டன். ஒரு அணியின் தலைவனாக இருப்பதற்கும், ஆட்ட தந்திரங்களில் அணியை முன் நடத்துவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. நான் விராட் கோலியின் மிக பெரிய ரசிகன். கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஒரு தலை சிறந்த வீரர். இந்திய அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். ஆனால் ஆட்ட தந்திரங்களின் அடிப்படையில் வகையறுக்க சொன்னால், ஆஸ்திரேலியாவின் 'டிம் பைன்' மற்றும்  நியூஸிலாந்து 'கேன் வில்லியம்சன்' தான் சிறந்த கேப்டன்கள். எனவே சிறந்த கேப்டன் யாரென்று சொல்வது மிக கடினமான ஒன்று. எனினும் ஒரு அணியின் தலைவனாக 'விராட் கோலி' தான் சிறந்த கேப்டன்" என்று கூறியுள்ளார்.

 

தோனியின் அனுபவம் கை கொடுக்கும்:
தோனியை பற்றி பேசிய வாட்சன் "சூழ்நிலையின் ஏற்றவாறு  தோனியால் நான்கு, ஐந்து , ஆறு என எந்த இடத்திலும் சிறப்பாக விளையாட முடிந்தாலும், என்னை பொறுத்த வரை அவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர். உலக கோப்பையில் வெல்வதற்கு தோனியின் அனுபவம் கண்டிப்பாக கை கொடுக்கும். வரும் உலக கோப்பையை  வெல்ல இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் தோனி போன்றோர் சிறப்பாக விளையாட வேண்டும். அவர்களை தவிர்த்து இளம் வீரர்களான புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோரின் பங்களிப்பும் மிக முக்கியம்" என்று கூறியுள்ளார்.

 

இந்திய அணி வென்றால் சந்தோசம்:
வரும் மே 30-ம் தேதி தொடங்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அனைத்து அணிகளும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றன. இதில் எந்த அணி வெல்ல வேண்டும் என்று உங்களுக்குஆசை என்று கேட்டப்பொழுது "இங்கிலாந்து மற்றும் இந்திய அணி தான் என் பேவரைட். எனவே இந்த இரண்டு அணிகளில்  ஒன்று வெற்றி பெறும் என்று நினைக்கிறேன்" என்று அதிரடியாக கூறியுள்ளார். 

 

News Counter: 
100
Loading...

priya