ரூ.1,000 கோடி.. பட்ஜெட்டில் ஹாலிவுட் நாயகர்களை இயக்கவிருக்கும் ஷங்கர்..!

share on:
Classic

இந்தியன் -2வை தொடர்ந்து ரூ.1,000 கோடி மெகா பட்ஜெட் படம் இயக்கவிருக்கும் ஷங்கர்..!

ரஜினி,கமலை தொடர்ந்து அர்னால்ட், ஜாக்கிசானை இயக்கவிருக்கும் ஷங்கர்..!

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட படங்களை இயக்கும் இயக்குநர்களின் பட்டியலில் ஷங்கருக்கென தனி இடம் உண்டு. தனது ஒவ்வொரு படைப்பிலும் தனித்துவம் காட்டி, முதலீட்டை திரும்ப எடுக்கும் பிரம்மாண்ட வெற்றி இயக்குநர் ஷங்கர். இவரின் இயக்கத்தில் இந்த வாரம் வெளியாகி உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் படம் '2.0'. கோலிவுட் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் -2 படத்தை இயக்குவதற்கான பணிகளை துவங்கியுள்ளார் ஷங்கர். வெளிநாடுகளில் இப்படத்திற்கான மேக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து ஷங்கர் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் இந்திய சினிமாவின் மாபெரும் பிரம்மாண்ட படைப்பு ஒன்றை கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல சீன நிறுவனம் ஒன்று சில இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கவிருப்பதாகவும் இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஷங்கர் தற்போது ஈடுபட்டு வருகிறாராம். உலகிலேயே ஆங்கில படங்களை அடுத்து பெரிய பட்ஜெட் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் அர்னால்ட், ஜாக்கிசான் மற்றும் இந்தியாவின் பெரிய ஸ்டார் ஒருவர் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதும் ஷங்கர் தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை. இது வெறும் வதந்தியா இருந்துவிட்டால் இந்திய சினிமா ஒரு மெகா பிரம்மாண்டத்தை இழக்கும், அப்படி அல்லாமல் இந்த பிரம்மாண்டம் சாத்தியமானால் இந்திய சினிமாவின் உச்சமாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை...
 

News Counter: 
100
Loading...

aravind