"சார் என் இதயத்தை திருடிட்டாங்க" போலீசார் சந்தித்த விசித்திர வழக்கு..!

share on:
Classic

என் இதயத்தை திருடிட்டாங்க எனக்கு திரும்ப வாங்கி குடுங்க என்று நாக்பூரில் இளைஞர் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

சார் என் கிணத்தை காணோம்னு தமிழ் படத்தில் ஒரு காமெடியை பார்த்திருப்போம் அது போல நாக்பூரில் ஒரு இளைஞர் தன் இதயத்தை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்து அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார் .

என் இதயத்தை காணோம்​ : 

’என் இதயத்தை காணோம் அதை திருப்பி வாங்கி கொடுங்கள்’ என்று இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அதை போலீசார் விளையாட்டாக எடுத்து அதை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால், அந்த இளைஞர் போலீசாரை விடுவதாக இல்லை. வழக்குப்பதிவு செய்ய வற்புறுத்தியுள்ளார்.

Related image

 

அதிர்ச்சியடைந்த போலீசார்

என்ன செய்வதென்று அறியாத போலீசார் உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, நடந்த விஷயங்களை கூறினார். இதைக்கேட்ட அதிகாரிகளும் அதிர்ச்சிக்குள்ளாயினர். பின்னர் இந்த புகாரை பதிவு செய்ய சட்டத்தில் எந்த ஒரு உட்பிரிவும் இல்லை. அதனால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியாது என்று அந்த இளைஞருக்கு உயரதிகாரிகள் ஆலோசனை கூறி வீட்டிற்கு அனுப்பினர்.
 

வேதனை அடைந்த போலீசார் : 

இந்த விஷயத்தை பற்றி செய்தியாளர்களிடம் கூறிய போலீசார் "புகார் வந்தால் திருடப்பட்ட பொருள்களை கண்டுபிடித்து கொடுக்கிறோம்,ஆனால் இது போன்ற புகார் வந்தால் என்ன செய்வது? என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

News Counter: 
100
Loading...

youtube